காணொளி: 'அச்சுறுத்தலுக்கு பயப்படமாட்டோம்' - புதின், கிம்மை அருகில் வைத்துக்கொண்டு பேசிய ஷி ஜின்பிங்

காணொளிக் குறிப்பு, 'அச்சுறுத்தலுக்கு பயப்படமாட்டோம்' - புதின் மற்றும் கிம்மை அருகில் வைத்துக்கொண்டு பேசிய சீன அதிபர் ஷி ஜின்பிங்
காணொளி: 'அச்சுறுத்தலுக்கு பயப்படமாட்டோம்' - புதின், கிம்மை அருகில் வைத்துக்கொண்டு பேசிய ஷி ஜின்பிங்

'உலகம் அமைதி அல்லது போர் என்கிற தேர்வின் முன் தற்போது நிற்கிறது'

பெய்ஜிங்கில் நடைபெற்ற சீனாவின் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின், வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் ஆகியோரை அருகில் வைத்துக்கொண்டு சீன அதிபர் ஷி ஜின்பிங் பேசிய வார்த்தைகள் இவை.

மேற்கு நாடுகளுக்கு எதிரான ஒருங்கிணைந்த வலிமையின் வெளிப்பாடாக இந்த நிகழ்வு கருதப்படுகிறது.

மறுபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதனை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்காவுக்கு எதிராக சதி செய்வதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் என்ன நடந்தது?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு