சிஎஸ்கே அணியில் அஸ்வின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கான காரணம் என்ன?
2025 சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலம் சௌதி அரேபியாவில் நவம்பர் 24 ஆம் தேதி அன்று தொடங்கியது.
இரு நாட்கள் நடந்த இந்த மெகா ஏலத்தில் ஐபிஎல் தொடரில் இருக்கும் 10 அணிகளும் தக்கவைத்துள்ள வீரர்களைத் தவிர்த்து மீதமுள்ள வீரர்களை ஏலத்தில் எடுத்தன.
இந்த சீசனுக்கான ஐபிஎல் மெகா ஏலத்தில் சிஎஸ்கே அணியில் தொடக்கத்தில் ஆடிய ஆஃப் ஸ்பின்னர் ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் சிஎஸ்கே அணிக்குத் திரும்பியுள்ளார்.
10 ஆண்டுகளுக்கு பிறகு சிஎஸ்கே அணியில் அஸ்வின் ஏன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என்பதற்கான காரணத்தை சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதென்ன? முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



