'என் கை விரல் கொண்டே என் கண்ணை குத்திக் கொண்டேன்' - ராமதாஸ்

'என் கை விரல் கொண்டே என் கண்ணை குத்திக் கொண்டேன்' - ராமதாஸ்

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணி ராமதாஸுக்கும் இடையே ஏற்பட்டுள்ள முரண்பாடு தற்போது பேசுபொருளாக மாறிவருகிறது.

இந்த சூழலில் இன்று காலை செய்தியாளர்கள் சந்திப்பில் ஈடுபட்ட ராமதாஸ், அவரைச் சுற்றி நடக்கும் அனைத்தும் நாடகம் என்று கூறியுள்ளார்.

மேலும், "அய்யா தான் எல்லாம் என்று சொல்லிக் கொண்டு என்னை அதாள பாதாளத்தில் தள்ள நினைக்கின்றார்கள். அனைத்தும் அய்யா தான் என்று சொல்லிக் கொண்டே என்னை அவமானப்படுத்துகிறார்கள். என்னை சிறுமைப்படுத்துகிறார்கள்.

என்னுடைய கைவிரல் கொண்டே என் கண்ணைக் குத்திக் கொண்டேன். என்னை அனைத்து வகையிலும் அவமானப்படுத்திவிட்டு என்னுடைய உருவப்படத்தை வைத்து உற்சாகம் செய்கின்றனர். நடைபிணமாக்கி, என் பெயரில் நடைபயணம் செய்யப் போகின்றார்கள். அனைத்துமே நாடகம்," என்றும் கூறியுள்ளார் ராமதாஸ்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு