அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் எப்படி இருக்கிறது?
அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் ஜனவரி 22 ஆம் தேதி ராமரின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிலை பிரதிஷ்டைக்கு பிறகு கோவில் எப்படி இருக்கிறது, இதுவரையில் நடந்துள்ள கட்டுமானப்பணிகள் என்ன என்பதை காண்பதற்காக கோவிலை சிறிதுநேரம் உள்ளே சென்று சுற்றிப்பார்க்க ஊடகத்தினருக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
கோவிலின் கட்டுமானப்பணிகள் இன்னமும் நடைபெற்றுவருகிறது. ஆனால், முதல்கட்ட வேலைகள் முடிந்துவிட்டன. பணிகள் இன்னும் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குத்தொடரும் என்று கூறப்படுகிறது.
கோவிலின் கட்டிடக்கலையை பொறுத்தவரை பல இடங்களிலிருந்து கட்டிட கலைஞர்கள் இங்கு அழைக்கப்பட்டுள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் காணப்படும் சிற்பக்கலையின் அம்சங்கள் அனைத்தும் அயோத்தில் உள்ள ராமர் கோவில் கட்டுமான வடிவமைப்பில் கொண்டுவர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ராமர் கோவிலுக்காக சுமார் 70 ஏக்கர் நிலம் ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு அளிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக அது தொடர்பான விவாதம் இருந்து வந்துள்ளது என்று நம் அனைவருக்கும் தெரியும்.
அதன் பின்னர் கடைசியாக 2021 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தபிறகு அந்த முழு நிலமும் ராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு அதாவது இந்துக்களுக்கு வழங்கப்பட்டது. அந்த இடத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் மசூதி கட்டுவதற்காக முஸ்லிம்களுக்கு நிலம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



