கள்ளக்குறிச்சி: 'துடிதுடித்து இறந்தார், இதுக்கெல்லாம் காரணம் இவர்தான், ஆனால்…' - காணொளி
கள்ளக்குறிச்சி நீதிமன்றம் பின்புறம் உள்ள கருணாபுரம் பகுதிக்குள் நுழைந்தபோது பரபரப்பான நகரின் எந்த ஒரு சத்தமும் கேட்காதவாறு மரண ஓலம் ஆதிக்கம் செலுத்தியது.
“எங்கண்ணன் துடி துடித்து இறந்ததை நான் என் கண் முன்னே பார்த்தேன் சார்” என்று அழுதுகொண்டே கூறினார் மணி.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து முதன் முதலில் இறந்த சுரேஷின் சகோதரர் இவர்.
“எனது சகோதரர் சுரேஷ் தான் இந்த சாராய குடிக்கு முதல் பலி. அவர் துடி துடித்து இறந்ததை நான் என் கண் முன்னே பார்த்தேன். முதலில் கை கால் வலிக்கிறது என்று கூறியவர் மரத்துப் போனதாக கூறினார் .வயிறு வலிக்கிறது என்று துடித்தவரை தூக்கிக்கொண்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கினாலும் எனது அண்ணன் சுரேஷ் பிழைக்க முடியவில்லை. வயிறு திடீரென உப்பியதை என் கண் முன்னே பார்த்தேன்.”
மேலும் தெரிந்துகொள்ள, காணொளியைப் பாருங்கள்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



