சவிதா: மறைந்த மகளுக்கான விருதை தந்தை பெற்ற உணர்வுப்பூர்வமான தருணம்

காணொளிக் குறிப்பு, மறைந்த மகள் சார்பில் தந்தை விருது பெற்ற உணர்வுப்பூர்வமான காட்சி இது.
சவிதா: மறைந்த மகளுக்கான விருதை தந்தை பெற்ற உணர்வுப்பூர்வமான தருணம்

மறைந்துவிட்ட மகளுக்கான விருதை அவர் சார்பில் தந்தை பெற்றுக் கொண்ட உணர்வுப்பூர்வமான காட்சி இது. 2022-ஆம் ஆண்டுக்கான டென்சிங் நார்கே தேசிய சாகச விருது மறைந்த சவிதா கன்ஸ்வாலுக்கு அறிவிக்கப்பட்டது.

16 நாட்களுக்குள் எவரெஸ்ட் சிகரத்திலும் மகாலு சிகரத்திலும் ஏறிய முதல் இந்தியப் பெண் சவிதா கன்ஸ்வால். 2023 அக்டோபரில், உத்தராகண்டின் உத்தர்காசி மலைப் பகுதியில் பனிச்சரிவில் சிக்கி சவிதா கன்ஸ்வால் உயிரிழந்தார்.

சவிதாவுக்கான விருதை அவரது தந்தை ராதே ஷ்யாம் கன்ஸ்வாலிடம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார். அப்போது அரங்கில் இருந்த சிலர் உணர்ச்சிப்பெருக்கில் கண்ணீர் வடித்தனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)