புல்வாமா தாக்குதல் நிகழ்ந்தபோதே சொல்லாதது ஏன்? - சத்யபால் மாலிக் பேட்டி
புல்வாமா சம்பவத்திற்கு உள்துறை அமைச்சகம்தான் பொறுப்பு என்று பிபிசிக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் சத்யபால் மாலிக் கூறினார்.
"புல்வாமாவில் தாக்குதல் நடந்த அன்றே, இந்தப் பிரச்னையை நான் எழுப்பினேன். ஆனால் அமைதியாக இருக்குமாறு என்னிடம் கூறப்பட்டது. அப்போதுதான் அவர்கள் பாகிஸ்தானை நோக்கிய திசையில் கொண்டு செல்கிறார்கள் என்பது எனக்குத் தெரிந்தது.
அந்த நேரத்தில் அவர்களை எதிர்ப்பது ஆபத்தான வேலை. ஏனென்றால் அவர்கள் என்னை தேசத்துரோகி என்று அறிவித்திருப்பார்கள். விவசாயி இயக்கத்தின்போது இவர்கள் விவசாயிகளைப் புறக்கணிப்பதைப் பார்த்தபோதுகூட நான்தான் பிரச்னையை எழுப்பினேன்,” என்று பிபிசியிடம் பேசிய சத்யபால் மாலிக் குறிப்பிட்டார்.
தேர்தலுக்கு முன்பாக அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார். ( முழு தகவல் காணொளியில்)

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



