டேட்டிங்கா, நிச்சயிக்கப்பட்ட திருமணமா? - பிரிட்டனில் வசிக்கும் தெற்காசிய இளைஞர்கள் சந்திக்கும் சவால் - காணொளி
டேட்டிங்கா, நிச்சயிக்கப்பட்ட திருமணமா? - பிரிட்டனில் வசிக்கும் தெற்காசிய இளைஞர்கள் சந்திக்கும் சவால் - காணொளி
பிரிட்டனில் வசிக்கும் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர்கள் இரண்டு கலாசாரங்களின் மத்தியில் நிற்கின்றனர்.
அவர்களது தெற்காசியக் கலாசாரம் அவர்களை 'நிச்சயிக்கப்பட்ட திருமணம்’ செய்யச் சொல்லி வற்புறுத்துகிறது. ஆனால் அவர்களோ டேட்டிங் மூலம் தங்களுக்கான துணையைத் தேடிக்கொள்ள விழைகிறார்கள்.
இதில், தன்பால் ஈர்ப்பாளர்களின் நிலை இன்னும் சிக்கலானது.
பல தன்பால் ஈர்ப்பாளர்களின் பெற்றோர் அவர்களைக் கைவிட்டதனால், அவர்கள் வீடுகளிலிருந்து வெளியேறி வாழ்கின்றனர்.
இத்தனை சிக்கல்களுக்கிடையே, பிரிட்டனில் வசிக்கும் இந்த தெற்காசிய இளைஞர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை எவ்வாறு தேர்ந்தெடுக்கின்றனர்?
அவர்களது கதையை அவர்களது குரலிலேயே கேளுங்கள்…

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



