உலகம் முழுக்க இசைக்கப்படும் மானாமதுரை கடம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

உலகம் முழுக்க இசைக்கப்படும் மானாமதுரை கடம் எப்படி தயாரிக்கப்படுகிறது?

"கடம் தயாரிப்பதற்கு தேவையான மணலை, மானாமதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து எடுத்து வந்து, அதை உலர்த்தி, மழை நீரில் நனைத்து, தேவையான அளவு ஆற்று மணல் கலந்து கடங்களைச் செய்கிறோம்" என்கிறார் மானாமதுரையைச் சேர்ந்த கடம் செய்பவரான ராமேஷ்.

போதுமான ஆதரவு இல்லாததால், இந்த தொழிலை பெரிய அளவில் செய்ய முடியவில்லை என வேதனைப்படுகிறார் அவர்.

"சில வகை களி மண்களை எடுக்க எங்களுக்கு அனுமதி கிடைப்பதில்லை. எங்களுக்கு என ஒரு அடையாள அட்டை கொடுத்து, அதை எடுக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். அரசு ஆதரவளித்தால் இந்த தொழில் மேலும் வளரும். எதிர்கால தலைமுறைகளுக்கு இந்த தொழில் ஒரு அடையாளச் சின்னமாக இருக்கும்" என்று கூறுகிறார் ராமேஷ்.

செய்தியாளர்: தங்கதுரை குமாரபாண்டியன்

படத்தொகுப்பு: ஜெரின் சாமுவேல்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)