காணொளி - மத்திய இணையமைச்சரை 'துரோகி' என்று அழைத்த ராகுல் காந்தி

காணொளிக் குறிப்பு, மத்திய இணையமைச்சரை 'துரோகி' என்று அழைத்த ராகுல் காந்தி
காணொளி - மத்திய இணையமைச்சரை 'துரோகி' என்று அழைத்த ராகுல் காந்தி

நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி.-கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக சென்ற மத்திய இணையமைச்சர் ரவ்நீத் சிங் பிட்டுவை, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி 'துரோகி' என்று அழைத்தார்.

இதனை தொடர்ந்து, ராகுலை 'இந்தியாவின் எதிரி' என்று கூறிய ரவ்நீத் சிங் அவரோடு கை குலுக்க மறுத்தார்.

கடந்த 2024-ல் ரவ்நீத் சிங் பிட்டு காங்கிரஸில் இருந்து விலகி பாஜக-வில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு