'தினமும் மெசேஜ் செய்கிறேன், பதில் இல்லை' - காஸாவில் திருமணத்துக்கு முன்தினம் காதலரை இழந்த பெண்

காணொளிக் குறிப்பு, காஸா: 'தினமும் மெசேஜ் செய்கிறேன், ஆனால் பதில் இல்லை' - திருமணத்துக்கு முந்தைய நாள் காதலரை இழந்த பெண்
'தினமும் மெசேஜ் செய்கிறேன், பதில் இல்லை' - காஸாவில் திருமணத்துக்கு முன்தினம் காதலரை இழந்த பெண்

தான் திருமணம் செய்ய வேண்டிய அகமதுவை அதற்கு முந்தைய நாள் இழந்தார் மலக்.

மத்திய காஸாவில் உள்ள டெயிர் அல்-பலாவில் உள்ள வீட்டில் அகமதுவும் அவரின் குடும்பமும் இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்டதாக பாலத்தீன செய்தி முகமையான வாஃபா கூறுகிறது. அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்ட போதிலும் அகமதுவும் அவரின் குடும்பமும் அங்கேயே இருந்தது.

காஸாவில் கடினமான சூழல் இருந்தபோதும் திருமணத்தை நல்ல முறையில் நடத்த அகமது வலியுறுத்தியதாகக் கூறுகிறார் மலக். இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பள்ளி முகாமில் எளிமையாக விருந்து அளிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு