இஸ்ரேல் தாக்குதல்: கட்டட இடிபாடுகளில் சிக்கிய சிறுவன் பிழைத்தது எப்படி?
காஸாவின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாயின. கட்டட இடிபாடுகளுக்குள் ஒரு சிறுவன் சிக்கிக்கொண்டார்.
மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் டார்ச் வெளிச்சத்தில் சிறுவனை மீட்கும் முயற்சி நடைபெற்றது. நீண்ட போராட்டத்திற்குப் பிறகு சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காஸாவில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன.
சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டும் 10-இல் 4 பேர் குழந்தைகளாக உள்ளதாக காஸாவில் பணியாற்றும் மருத்துவர்கள் கூறுகிறார். வியாழக்கிழமை காலை, கான் யூனிஸ் பகுதிக்கு அருகாமையில், இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.
காஸாவின் வடக்கு பகுதியில் இருந்து தெற்கு நோக்கி இடம்பெயர்ந்தவர்களில் ராஃபத் அல் நகல்லும் ஒருவர். தெற்கு பகுதியில் இஸ்ரேல் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக இவர் கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



