புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைப்பது ஏன்? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் திறந்து வைப்பது ஏன்? - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்தியாவின் புதிய நாடாளுமன்ற கட்டடம், மே 28ஆம் தேதியன்று இந்திய பிரதமர் நரேந்திர மோதியால் திறந்து வைக்கப்படவுள்ளது. இந்த புதிய கட்டடத்தை இந்திய குடியரசுத் தலைவரை வைத்துத் திறந்துவைக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்த நிலையில், அந்தக் கோரிக்கையை பாஜக அரசு நிராகரித்துள்ளது. இதையடுத்து, 19 எதிர்க்கட்சிகள் இந்த விழாவைப் புறக்கணிக்க முடிவு செய்துள்ளன.
இந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைப்பது ஏன் என்பது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்துள்ளார்.

பட மூலாதாரம், ANI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



