You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வட கொரியாவில் மாரத்தான் ஓடிய வெளிநாட்டவர் அந்நாட்டு மக்கள் குறித்து கூறுவது என்ன?
வட கொரியாவில் நடைபெற்ற மாரத்தானில் பங்கேற்றவர்கள் தங்கள் அனுபவத்தை இந்த காணொளியில் பகிர்ந்துகொள்கின்றனர்.
"வட கொரியாவில் நாங்கள் மாரத்தான் ஓடினோம். நாங்கள் மாரத்தானில் நேரம் செலவிடுகிறோம், ஏனெனில் வழிகாட்டி இல்லாமலோ அல்லது யாரும் பார்க்காமாலோ அப்போதுதான் சுதந்திரமாக நடக்க முடியும்." என்கிறார் பயண கண்டென்ட் கிரியேட்டர் ஜூலியா செர்னோகோரோவா.
செர்னோகோரோவா. நாங்கள் அங்கு 5 நாட்கள் இருந்தோம், நான்காம் நாளில் மாரத்தான் நடந்தது. எனவே, முன்பாக நாங்கள் பியோங்யாங் முழுவதும் வெவ்வேறு இடங்களுக்கு சென்றோம்." என்கிறார் பயண கண்டென்ட் கிரியேட்டர் மட் லாஃப்டன்.
"அங்கிருந்த சூழல் மன எழுச்சியாக இருந்தது. மக்களும் ஆதரவாக இருந்தனர். மாரத்தான் முழுதும் நாங்கள் கொஞ்சம் பதற்றமாக இருந்தோம். கிளைமேக்ஸ் போன்று இருந்தது, இந்த மாரத்தான் பெரிதுபடுத்தப்பட்டிருந்தது. எல்லோரும் உணர்ச்சிவயப்பட்ட நிலையில் இருந்தனர். அங்கிருந்த அனைவருமே உண்மையிலேயே அழுதுவிட்டோம்.
கொரியர்கள் மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள் என்பதை உணர்ந்தோம். அவர்கள் அப்படி இருப்பார்கள் என எதிர்பார்க்கவில்லை. பகடியாக பேசி சிரித்தனர்." என்கிறார் ஜூலியா செர்னோகோரோவா
நாங்கள் பிரசாரம் செய்யவில்லை, அங்கு செல்ல எங்களுக்குப் பணமும் வழங்கவில்லை. அங்கு செல்ல நாங்கள் தான் செலவு செய்தோம். அந்த நாட்டில் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்பதை பார்க்கவும் அதை பகிரவும் சென்றோம்." என்கிறார் பயண கண்டென்ட் கிரியேட்டர் ஜூலியா செர்னோகோரோவா.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு