திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்றுவதில் மீண்டும் இழுபறி - நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது

திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்றுவதில் மீண்டும் இழுபறி - நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா கைது

திருப்பரங்குன்றம் விவகாரத்தில், நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவில் மனுதாரரை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் மலைக்கு அழைத்துச் சென்று தீபம் ஏற்ற வைக்கவேண்டும் எனவும் தீபம் ஏற்றியது தொடர்பான அறிக்கையை டிசம்பர் 5 காலை 10:20 மணிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில், மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அங்கு வராத நிலையில், துணை ஆணையர் இனிகோ திவ்யனிடம் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். மேலும், "மாநகர காவல் துறை ஆணையர் லோகநாதன் வர வேண்டும். அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம்," என்று மனுதாரர் ராம. ரவிக்குமார் தெரிவித்தார்.

மேலும், அவர் நீதிமன்ற உத்தரவுப்படி மலைமீது தீபம் ஏற்ற வந்தபோது மலைப்பாதை அருகே போலீசார் அவரைத் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு இந்துத்துவ அமைப்பினர் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஹெச்.ராஜா உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதனால், அவர்கள் ஏற்றிச் செல்லப்பட்ட போலீஸ் வாகனத்தை மறித்து பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் விளைவாக அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

Correction: ராம ரவிக்குமார் - இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு