'காஸாவில் பட்டினியால் இறக்கும் குழந்தைகள்' - கண்ணீர் விட்ட பாலத்தீன தூதர்
'காஸாவில் பட்டினியால் இறக்கும் குழந்தைகள்' - கண்ணீர் விட்ட பாலத்தீன தூதர்
ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய பாலத்தீன தூதர் தங்கள் நாட்டில் பட்டினியில் குழந்தைகள் இறக்கின்றனர் என்று கண்ணீர் விட்டு அழுது பேசினார்.
அவர், "டஜன்கணக்கான குழந்தைகள் பட்டினியில் இறக்கின்றனர். குழந்தைகளின் அசைவற்ற உடல்களை பெண்கள் ஆரத் தழுவி, தலைமுடியை தடவி, அவர்களிடம் பேசுவதும், மன்னிப்பு கேட்பதும் பார்க்க தாங்க முடியாத காட்சிகள். யாரால் இதை தாங்க முடியும்?
எனக்கு பேரப்பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் எவ்வளவு முக்கியமானவர்கள் என்று நன்கு அறிவேன். பாலத்தீனர்களுக்கு ஏற்பட்டிருக்கும் சூழ்நிலையை பார்த்தும், நாம் எதையாவது செய்ய மனமில்லாமல் இருப்பது, எந்தவொரு சாதாரண மனிதராலும் பொறுத்துக்கொள்ள முடியாது" என்று பேசியிருந்தார்.
அவர் பேசிய காட்சிகளை வீடியோவில் காணலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



