காணொளி: தெருநாய்களுக்காக சென்னையில் கவன ஈர்ப்பு கூட்டம்
காணொளி: தெருநாய்களுக்காக சென்னையில் கவன ஈர்ப்பு கூட்டம்
அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகள் பொது இடங்களில் தெரு நாய்களை அகற்றி, விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு விதிகளின்படி தடுப்பூசி, கருத்தடை செய்த பின்னர், நாய்களுக்கான காப்பகங்களில் வைக்க வேண்டும் என கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த தீர்ப்பு குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தன. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஞாயிற்றுக்கிழமை சுமார் 50 இடங்களில் விலங்கு நல ஆர்வலர்கள் கவன ஈர்ப்பு கூட்டத்தை நடத்தினர். சென்னை திருவான்மியூரில் நடந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



