You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அதானி தொடர்பான சர்ச்சை: தமிழ்நாடு மின்சார துறை அமைச்சர் கூறுவது என்ன?
தமிழ்நாடு மின்சார வாரியத்தைப் பொறுத்தவரையில், அதானி நிறுவனத்துடன் கடந்த 3 ஆண்டுகளாக எவ்வித வணிக தொடர்பும் இல்லை என, அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் அதானி மற்றும் அவரது குழும அதிகாரிகள் சிலர் மீது ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. இவர்கள் இந்தியாவில் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் சில ஒப்பந்தங்களை கைப்பற்ற இந்திய அதிகாரிகளுக்கு சுமார் 250 மில்லியன் டாலர்கள் லஞ்சம் கொடுக்க ஒப்புக்கொண்டுள்ளன, இந்த ஒப்பந்தங்கள் மூலம் அடுத்த 20 ஆண்டுகளில் சுமார் 2 பில்லியன் டாலர்கள் லாபம் மட்டும் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், லஞ்ச விவகாரத்தை மறைத்து அமெரிக்க மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் உள்ளிட்டோரிடம் பத்திரங்கள் மற்றும் கடன் மூலம் சுமார் 3 பில்லியன் டாலர்கள் திரட்டியுள்ளனர்.
இது ஒரு மோசடி என்கிறது அமெரிக்காவின் குற்றப் பத்திரிகை. கௌதம் அதானி உள்ளிட்டோர் மீது கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை கூறுகிறது.
ஆனால், அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை என நாங்கள் நிரூபிப்போம் என, அதானி குழுமம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க அரசு வழக்கறிஞர் அலுவலகத்தின் கூற்றுப்படி, 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில், அதானி மற்றும் பலர் இந்தியாவில் உள்ள அரசு அதிகாரிகளை பலமுறை சந்தித்து, மின் விற்பனை ஒப்பந்தத்தில் கையெழுத்திட லஞ்சம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
லஞ்சம் வழங்கிய பின்னர், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், தமிழ்நாடு மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் உள்ள மின் விநியோக நிறுவனங்கள் SECI உடன் ஒப்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக, தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று செய்தியாளர்களிடம் விளக்கமளித்தார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)