மண்ணில் புதைந்த கட்டடங்கள், வீதியில் திரண்ட மக்கள் - மியான்மர் நிலநடுக்க பாதிப்பை விளக்கும் புகைப்படங்கள்

மத்திய மியான்மர் பகுதியில் 7.7 என்ற அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

நிலநடுக்கத்தின் மையப்புள்ளி சர்காயிங் நகருக்கு வடமேற்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் அமைந்திருந்தது.

வலுவான நில நடுக்கங்கள் தாய்லாந்து மற்றும் தென்மேற்கு சீனாவின் யுனான் வரை நீண்டிருந்தது.

நேபிடோவில் உள்ள ஒரு மருத்துவமனை வளாகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவசர சிகிச்சைப் பிரிவிற்கான நுழைவாயில் சேதமடைந்தது.

மியான்மரின் ராணுவ தளபதி மின் ஆங் ஹலேய்ங் பாதிப்புகளை ஆய்வு செய்து, தப்பிப்பிழைத்து மைதானங்களில் திரண்டவர்களை சந்தித்தார்

நில நடுக்கத்தின் தாக்கத்தால் சாலைகள் சிதிலமடைந்தன, மியான்மர் தலைநகர் முழுவதும் கட்டடங்கள் சேதமடைந்தன.

நேபிடோவில் பெளத்த மத மட வளாகத்தின் பெரும்பகுதிகள் சேதமடைந்தன.

மத்திய மியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அதிர்வுகள் அருகில் உள்ள தாய்லாந்தின் பாங்காக் வரை நீண்டது.

தாய்லாந்து தலைநகரில் ஒரு பெரிய கட்டடம் சரிந்ததைத் தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை தேடும் பணி தொடர்கிறது

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு