You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நேத்ரா குமணன்: பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்க தயாராகும் சென்னை பெண்ணின் கதை - காணொளி
சென்னை, ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த நேத்ரா குமணன், வரும் ஜூலை மாதம் பாரிஸ் நகரில் நடைபெற உள்ள 2024 ஒலிம்பிக்கின் பாய்மர படகுப் போட்டியில் கலந்து கொள்வதற்கு தகுதி பெற்றுள்ளார். பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
இந்தியாவின் சார்பாக ஒலிம்பிக் போட்டிகளுக்கு இவர் தகுதி பெறுவது இது இரண்டாவது முறை. இதற்கு முன்பாக 2020 டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளுக்கும் அவர் தகுதி பெற்றிருந்தார்.
சிறுவயதில் இருந்தே பாய்மர படகுப் போட்டிகளில் கலந்துகொண்டு வருகிறார் நேத்ரா. 2014 மற்றும் 2018இல் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பாக கலந்து கொண்ட அவர், அதில் முறையே 7வது மற்றும் 4வது இடங்களைப் பிடித்தார். பாய்மரப் படகுப் போட்டிகளுக்காக ஆப்ரிக்காவிற்கு மேற்கே உள்ள கிராண்ட் கனேரியா தீவுகளில், ஒரு ஐரோப்பிய அகாடமி மூலமாக பயிற்சி எடுத்துக் கொள்கிறார் நேத்ரா.
தனது கதையை அவரே சொல்கிறார் இந்தக் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)