You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இஸ்ரேல் - பாலத்தீனம் வரலாற்றை புரட்டிப்போட்ட 67 வார்த்தைகள் - எப்படி?
இன்று ஒட்டுமொத்த உலகமும் ஒரு பிரச்னையைத் தீர்க்கப் போராடிக் கொண்டிருக்கிறது. ஆனால், இன்று இவ்வளவு கடினமான ஒரு பிரச்னையாக உருவெடுத்திருக்கும் இஸ்ரேல் - பாலத்தீன பிரச்னையின் அடித்தளமே வெறும் 67 வார்த்தைகள்தான் என்றால் நம்புவீர்களா?
ஆம், அந்த ஆவணத்தில் இருந்த ஒரு பக்கத்தில் 67 வார்த்தைகள் மட்டுமே எழுதப்பட்டிருந்தன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸுக்கு இடையே தற்போது நடைபெறும் மோதலில் இருதரப்பும் பெரும் இழப்புகளைச் சந்தித்து வருகின்றன.
இந்த மோதலில் இதுவரை இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் குறைந்தது 1,400 பேரும், காஸா பகுதியில் 8,500க்கு மேற்பட்டோரும் கொல்லப்பட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)