You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: இரானில் அதிபரை விட அதிக அதிகாரம் கொண்டவர் யார்?
உலகின் மிகச்சிறந்த பண்டைய பேரரசுகளில் ஒன்றாக கருதப்படும் இரான், தனது மொழியைத் தக்கவைத்துக்கொண்டதாலும், இஸ்லாமின் ஷியா பிரிவைப் பின்பற்றுவதாலும் இது நீண்டகாலமாக ஒரு தனித்துவமான கலாசார அடையாளத்தை கொண்ட நாடாக இருந்து வருகிறது.
தற்போது ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிஉயர் தலைவராகவும், மசூத் பெசெஷ்கியன் அதிபராகவும் உள்ளனர்.
இரானில் அதிபர் என்பவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேலும் அவர் நாட்டின் தரவரிசையில் அதிஉயர் தலைவருக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளார். அரசாங்கத்தின் அன்றாட நிர்வாகத்திற்கு அவரே பொறுப்பு. அத்துடன் உள்நாட்டுக் கொள்கை மற்றும் வெளியுறவு விவகாரங்களில் அவர் குறிப்பிடத்தக்க செல்வாக்கைக் கொண்டுள்ளார்.
இரானின் முக்கிய வரலாற்று நிகழ்வுகள் என்னென்ன? மன்னராட்சியை வீழ்த்தி இஸ்லாமிய குடியரசாக இரான் மாறியது எப்படி? இந்த காணொளியில் பார்க்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு