காணொளி: போன்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு - இதுவரை நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: போன்டி கடற்கரை துப்பாக்கிச் சூடு - இதுவரை நடந்தது என்ன?

எச்சரிக்கை: இந்த காணொளி சங்கடத்தை தரலாம்

ஆஸ்திரேலியாவின் போன்டி கடற்கரையில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் காட்சி இது.

யூத சமூகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர், 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் துப்பாக்கிச்சூடு நடத்திய ஒருவர் கொல்லப்பட்டதாகவும், மேலும் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஹனுக்கா எனப்படும் யூத பண்டிகையை கொண்டாடுவதற்காக 1000-க்கும் மேற்பட்டோர் கடற்கரையில் குவிந்திருந்ததாக காவல்துறை கூறியது.

ஆஸ்திரேலிய பிரதமர் ஆண்டனி அல்பனீசி இந்த சம்பவத்தை, "தேசத்தின் இதயத்தைத் தாக்கிய தீய யூத எதிர்ப்பு மற்றும் பயங்கரவாத செயல்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு