குடியரசுத் தலைவர்களின் பரிசுப் பொருட்களை நீங்களும் வாங்கலாம் - எப்படி தெரியுமா?
டெல்லி ராஷ்ட்ரபதி பவனில் வைக்கப்பட்டுள்ள, குடியரசுத் தலைவர்களுக்கு வந்த பரிசுப் பொருட்களை இப்போது யார் வேண்டுமானாலும் ஏலத்தில் எடுத்து தங்களது வீட்டிற்குக் கொண்டு செல்லலாம்.
இதற்காக 'இ-உபஹார்' (E-Upahaar) என்ற ஆன்லைன் போர்டல் ஒன்று துவங்கப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக சுமார் 250 கலைப் பொருட்கள் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன. இதற்கான ஏலம் ஆகஸ்ட் 5 தேதி முதல் ஆகஸ்ட் 26-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்த ஏலத்தில் இருப்பதிலேயே மிக விலை உயர்ந்த பரிசுப் பொருள் சுபாஷ் சந்திர போஸின் ஓவியம். இது முழுக்க முழுக்க கடல் சிப்பிகளால் ஆனது. இந்த ஓவியத்தின் அடிப்படை விலை சுமார் 4 லட்சம் ரூபாய்
இங்கு குடியரசுத் தலைவர் திரளபதி முர்முவுக்கு கிடைத்த பரிசுப் பொருட்கள் மட்டுமல்ல. முன்னாள் குடியரசுத் தலைவர்கள் ஏ.பி.ஜே அப்துல் கலாம், பிரதீபா பாட்டீல், பிரனாப் முகர்ஜி, ராம்நாத் கோவிந்த் ஆகியோரின் பதவிக் காலத்தில் கிடைத்த பரிசுப் பொருட்களும் ஏலத்திற்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்தப் பரிசுப் பொருட்களை வாங்க நினைப்பவர்கள் அதற்காக உருவாக்கப்பட்ட இ-உபஹார் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
அதில் பதிவு செய்த பிறகு யார் வேண்டுமென்றாலும் தங்களுக்கு விருப்பமான பொருட்களை வாங்க விரும்புவதற்கான ஏலத்தொகையை தெரிவிக்கலாம்.
இந்தப் பொருட்களை வாங்குபவர்களுக்கு ராஷ்டிரபதி பவன் தரப்பிலிருந்து ஒரு சான்றிதழும் வழங்கப்படும்.
இந்த ஏலம் குறித்து எழும் மற்றொரு முக்கிய கேள்வி இதில் கிடைப்பபெறும் பணத்தை என்ன செய்வார்கள் என்பதுதான்.
அதற்கான விடை, வீடியோவில்…
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



