காணொளி: புதுக்கோட்டை பெண்களின் வாழ்க்கையை சைக்கிள் மாற்றியது எப்படி?

காணொளிக் குறிப்பு, புதுக்கோட்டை பெண்களின் வாழ்க்கையை சைக்கிள் மாற்றியது எப்படி?
காணொளி: புதுக்கோட்டை பெண்களின் வாழ்க்கையை சைக்கிள் மாற்றியது எப்படி?

இந்தியாவின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 32 ஆண்டுகளுக்கு முன்பாக ஆயிரக்கணக்கான பெண்கள் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டனர். அவர்கள் ஓட்டிய சைக்கிள், அவர்களது வாழ்க்கைப் பயணத்தையே மாற்றியது.

சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்ட ஒரு சாதாரண நிகழ்வு இதனைச் சாதித்தது எப்படி?

பெண்கள் சைக்கிள் ஓட்டுவது ஒரு பெரிய விஷயமா? அப்படி அவர்கள் சைக்கிள் ஓட்டினால், அவர்களது வாழ்வில் ஏதாவது மாறிவிடுமா? 21ஆம் நூற்றாண்டின் முதல் 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டில் இந்த இரு கேள்விகளையும் யாராவது கேட்டால், பதில் இல்லையென்பதாகவே இருக்கும்.

ஆனால், சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பாக தமிழ்நாட்டின் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்றான புதுக்கோட்டை, இந்தக் கேள்விகளுக்கு மறக்க முடியாத பதிலைச் சொன்னது.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு