You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மது பாட்டில்களை அடித்து நொறுக்கிய கிராம மக்கள் - வீதியில் ஆறாக ஓடிய அரசு மதுபானம்
தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டியிலிருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மலை கிராமம் பூதிநத்தம். இங்குள்ள மக்கள் திடீரென்று மதுபாட்டில்களை பொதுவெளியில் உடைத்தது ஏன்?
இங்குள்ள மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் சென்று பாபப்பாரப்பட்டி அரசு மதுபான கடைக்கு சென்று தான் மது வாங்கி குடிக்க வேண்டும்.
இதை பயன்படுத்தி பூதிநத்தம் , பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு, உள்ளிட்ட மலை கிராம பகுதிகளில் சிலர் சட்ட விரோதமாக அரசு மதுபானங்களை பெட்டி பெட்டியாக பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு சிலர் விற்பனை செய்தனர்.
24 மணி நேரமும் தங்கு தடையின்றி மது கிடைப்பதால் கல்லூரி மாணவர்கள், இளம் வயதினர், கூலி வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமலும் எந்நேரமும் மது அருந்தி விட்டு மதுபோதைக்கு அடிமையாகி வந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் உடல் நலம் பாதிப்படைவதுடன் போதிய வருமானம் இன்றி இவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து கிராமத்திற்குள் மது விற்க அனுமதிக்க கூடாது என பாப்பாரப்பட்டி காவல் நிலையந்தில் புகார் அளித்தனர்.
ஆனாலும் மது விற்பனை தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த பூதிநத்தம் கிராம மக்கள் ஒன்று திரண்டு சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்த ஜெயராமன் என்பவரு வீட்டை முற்றுகையிட்டனர்.
அவரது வீட்டுக்குள் பதுக்கி வைத்திருந்த மது பாட்டில்களை வெளியே கொண்டு வந்து பொதுவெளியில் அவற்றை உடைத்தனர். இது பற்றிய தகவலறிந்து போலீசார் மீதமுள்ள சுமார் 200 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். காணொளியில் இந்த காட்சிகளை விரிவாக காணலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்