டெல்லியை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி - மத்திய வேளாண் அமைச்சர் கூறுவது என்ன?

டெல்லியை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி - மத்திய வேளாண் அமைச்சர் கூறுவது என்ன?

விவசாயிகள் போராட்டம் குறித்து பிபிசி கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார் மத்திய வேளாண் அமைச்சர் அர்ஜுன் முண்டா.

இதில் போராட்டம் நடத்திவரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும், அதன் மூலம் பிரச்னை சுமூகமாக தீர்க்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை குறித்து பேசிய அவர், "ஒரு சட்டம் இயற்றப்பட்டாலும், இருதரப்பு அல்லது பல தரப்பு குறித்தும் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. இதில் விவசாயிகளின் பங்கு என்னவாக இருக்கும் என்பதை தீர்மானிக்க கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

2004-இல் எம்.எஸ். சுவாமிநாதன் கமிட்டி அறிக்கை வெளியாகி இருபது ஆண்டுகள் ஆகி விட்டது, அதை என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேட்டபோது, “2018 இல் நாங்கள் வெளியிட்ட அறிவிக்கை அமலில் உள்ளது. இதன் காரணமாக குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது. விவசாயிகளின் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. 246 மில்லியன் டன்னாக இருந்த உணவுதானிய உற்பத்தி இப்போது 330 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது” என்று பதிலளித்துள்ளார் அவர்.

"பட்ஜெட் ஒதுக்கீட்டில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் 27 ஆயிரம் கோடியாக இருந்தது. இன்று அது 1,24,000 கோடி ருபாய் பட்ஜெட்டாக உள்ளது. இது விவசாயிகளுக்காகத்தான் இருக்கிறது" என்றும் தெரிவித்துள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)