தடைகளைத் தாண்டி போராடி பாரம்பரிய சொத்தில் பங்கு பெற்ற திருநங்கை

காணொளிக் குறிப்பு, அரசியல் அமைப்பின் உதவியுடன் பரம்பரை சொத்தில் உரிமை பெற்றேன் - திருநங்கை விருஷாலி பெருமிதம்
தடைகளைத் தாண்டி போராடி பாரம்பரிய சொத்தில் பங்கு பெற்ற திருநங்கை

"இந்திய அரசியலமைப்பு அனைவருக்கும் சமமான உரிமையை வழங்கியிருக்கிறது. அதன் அடிப்படையிலேயே, நான் என்னுடைய பரம்பரை சொத்தில் இருந்து எனக்கான உரிமையைப் பெற்றேன்" என்று கூறுகிறார், விருஷாலி திஷா ஷேக்.

"திருநர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒருமுறை வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டால், அவர்களின் சொத்தில் பங்கைப் பெற இயலாது. வீடு, நிலம் மற்றும் சொத்து போன்றவற்றை வைத்திருக்கக் கூடாது என்ற எண்ணமே சமூகத்தில் ஏற்படுகிறது. இதற்கு காரணம் பெற்றவர்கள் அவர்களை வீட்டைவிட்டு வெளியேற்றிடுவது தான்" என்று தெரிவிக்கிறார்.

பல்வேறு போராட்டங்களுக்கு மத்தியில் தன்னுடைய பாரம்பரிய சொத்தில் விருஷாலி உரிமையைப் பெற்றது எப்படி? முழு விபரம் இந்த வீடியோவில்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)