You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இர்ஃபான் பேட்டி: 'பிரபலங்களையும் தேடி வரவைத்த எனது வெற்றிக்கு இதுதான் காரணம்'
“3 வருஷமா ஆட்டோ ஓட்டிருக்கேன். ஸ்கூல் பசங்களை ஆட்டோல கூட்டி போய் விடுவேன். ஆம்னி வண்டியும் ஓட்டுவேன். இந்த வேலையை செஞ்சிட்டே காலேஜ்ல படிச்சேன். வாடகை குடுக்க கஷ்டப்பட்டிருக்கோம். மளிகைக் கடை பொருட்கள கூட கடன்லாதான் வாங்குவோம். சில நேரம் அந்த கடனையும் அடைக்க முடியாம போயிருக்கு. ஒரு விஷயத்துல தொடர்ந்து உழைச்சா முன்னேறலாம்னு நினைச்சேன். இறைவன் அருளால இப்போ இந்த நிலைக்கு வந்திருக்கேன்"
இவை இர்ஃபான் உதிர்த்த வார்த்தைகள்.
சுருட்டை முடி, யதார்த்தமான பேச்சு, உற்சாகம் தொணிக்கும் குரல்... இதுதான் இர்ஃபான். Irfan’s View என்கிற யூடியூப் சேனல் தமிழ்நாட்டு உணவுப் பிரியர்கள் மட்டுமின்றி பலருக்கும் பரிட்சயம்.
சென்னைதான் பூர்வீகம். பள்ளி, கல்லூரியில் ஒரு சராசரி மாணவர். நடுத்தர குடும்பத்தில் வளர்ந்து நடிப்பின் மீது ஆர்வம் கொண்டவர். பிரபலமடைய வேண்டும் என்பது ஆரம்பகால ஆசை. 2016 நவம்பரில், யூடியூப் பெரிதாக மக்கள் கவனத்தை ஈர்க்காத சமயத்தில் தனது Vlog பயணத்தை துவங்கியிருக்கிறார். கிடைத்த நல்ல வேலைகளை விட்டுவிட்டு, எதிர்ப்புகளை மீறி முழு நேர யூடியூபராகி தொடர்ச்சியான உழைப்பின் மூலம் யூடியூபில் மட்டும் இர்ஃபான் அறுவடை செய்தது சுமார் 4 மில்லியன் ஃபாலோயர்ஸ். ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இர்ஃபானை பின் தொடர்வோரின் மொத்த எண்ணிக்கை சுமார் 60 லட்சம். அதாவது சிங்கப்பூரின் மொத்த மக்கள் தொகைக்கு நிகரானது.
சினிமா விமர்சனங்களில் தொடங்கி, வெவ்வேறு பகுதிகளின் உணவு வகைகள், வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள், பிரபலங்களுடனான நேர்காணல்கள், அவ்வப்போது சில பிராங்க் நிகழ்ச்சிகள் என இர்ஃபானின் வித்தியாசமான அணுகுமுறை இளைஞர்கள் மட்டுமின்றி பெரியவர்களையும் ஈர்த்திருக்கிறது.
பரபரப்பான காலை பொழுதில் இர்ஃபானை சென்னையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தோம். ஆரம்ப கால பயணம், பணிச்சுமை, யூடியூபர்களின் வளர்ச்சி, பிரபலங்களுடனான நேர்காணல், இந்திய பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் வழங்கிய தேசிய படைப்பாளிகள் விருது (National Creators Award 2024) உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து பேசியிருக்கிறார். அவருடன் நடத்திய சுவாரஸ்யமான உரையாடல் இதோ... இனி இர்ஃபான் பேசுவார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)