தொலைதூர கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை வழங்கும் பெண்கள்

தொலைதூர கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ சேவை வழங்கும் பெண்கள்

மகாராஷ்டிராவின் தொலைதூர மாவட்டமான கட்சிரோலியில், முப்பது ஆண்டுகளாக அமைதியாக ஒரு புரட்சி நடந்துள்ளது. இது அந்த வட்டாரத்தின் சுகாதார உள்கட்டமைப்பை மேம்படுத்தியதோடு, அந்த மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் உயர்த்தியது. ஆம்ஹி ஆமச்சயா ஆரோக்யசதி அமைப்பின் மூலமாக மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்கி, அதன் மூலம் பழங்குடி கிராமத்தில் ஏற்படும் பச்சிளம் குழந்தைகளின் மரணத்தை தடுத்துள்ளனர். பழங்குடி கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவ சேவையை அளித்து, ஊட்டச்சத்து குறைபாடுயுடைய குழந்தைகளின் நலனை பேணிக்காத்து வருகின்றனர். 2001ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கிய போது முதல் 28 நாளில், புதிதாக பிறந்த ஆயிரம் குழந்தைகளில் 72 பேர் வரை இறந்தனர். ஆனால் 2006ஆம் ஆண்டு இந்த எண்ணிக்கை 36 ஆக குறைந்தது. செய்தியாளர் - மயூரேஷ் கொன்னூர் படத்தொகுப்பு - மயூரேஷ் கொன்னூர் தயாரிப்பு - பிரஜக்தா துலப்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: