You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
250 ஆண்டுகள் கழித்து பிரிக்கப்பட்ட கடிதங்களில் இருந்த காதல் - வீடியோ
1756 முதல் 1763 வரை, பிரிட்டனுக்கும் பிரான்சுக்கும் இடையில் நடந்த ஏழாண்டுப் போரின் போது, பிரெஞ்சு மாலுமிகளுக்கு அவர்களது மனைவிகளும், காதலிகளும் எழுதிய கடிதங்கள் பிரிட்டனின் கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டன.
அக்கடிதங்கள் அவர்களை அடையவில்லை.
கடந்த 250 ஆண்டுகளாக இந்தக் கடிதங்கள் பிரிக்கப்படாமல் கிடந்தன.
தற்போது, இந்தக் கடிதங்களைக் கண்டுபிடித்த கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசிரியர் ரெனோ மோரியோ, அவை 1700களில் வாழ்ந்த மாலுமிகள் மற்றும் அவர்களது குடும்பங்களின் வாழ்க்கையைப் பற்றிய அரிய பார்வையை வழங்குவதாகக் கூறினார்.
மேலும், இந்தக் கடிதங்கள் பத்திகளாகப் பிரித்து எழுதப்படவில்லை என்றும் இவற்றில் நிறுத்தற்குறிகள் பயன்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார். அதனால் இது குறுஞ்செய்தி மொழி போல உள்ளதாகவும் கூறுகிறார்.
ஆனால் இவை மிகவும் சோகமானவை, ஏனெனில் அவர்கள் மீண்டும் சேர்ந்தார்களா என்று தெரியவில்லை என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)