காணொளி: பாலத்தீன கைதி இறந்ததாக கருதிய தனது குடும்பத்தை நேரில் கண்ட நெகிழ்ச்சி தருணம்
கொல்லப்பட்டதாக கருதிய தனது குடும்பத்தை இஸ்ரேலில் தடுப்புக்காவலில் இருந்த பாலத்தீன கைதி ஷாதி அபு சைடோ மீண்டும் உயிருடன் கண்டுள்ளார்.
தன்னுடய வீட்டில் குண்டு வீசப்பட்டதாகவும், குடும்பத்தினர் அனைவரும் கொல்லப்பட்டதாகவும் இஸ்ரேல் சிறைத்துறை அதிகாரி தன்னிடம் கூறியதாக இவர் கூறுகிறார்.
புகைப்பட செய்தியாளரான இவர், கடந்த ஆண்டு மார்ச் மாதம் அல்-ஷிபா மருத்துவமனையில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்தபோது கைது செய்யப்பட்டதாக கூறுகிறார்.
"இவ்வளவு அழிவுகள், மரணங்களுக்கு பிறகும், என் குடும்பம் உயிருடன் இருக்கிறது என்பது நம்பும்படி உள்ளதா? அவர்கள் என்னிடம் பொய் சொன்னார்களா?" என்றார் ஷாதி அபு சைடோ.
குடும்பத்தினர் இருந்த வீடு மீது குண்டுவீசப்பட்டது என சில ஆதாரத்தையும் இஸ்ரேல் அதிகாரி காட்டியதாக இவர் கூறுகிறார். 20 மாதங்கள் சிறையில் இருந்த ஷாதி, அண்மையில் பணயக் கைதிகள் விடுவிப்புக்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
சட்டத்துக்கு உட்பட்டே தாங்கள் செயல்படுவதாகவும், இது போன்ற சம்பவங்கள் நடப்பது குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது எனவும் இஸ்ரேல் சிறைத்துறை கூறுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



