தலித் பெண் படுகொலை: 'பதவியை ராஜினாமா செய்வேன்' என கூறிய எம்.பி

காணொளிக் குறிப்பு, தலித் பெண் படுகொலை - கதறி அழுத எம்.பி
தலித் பெண் படுகொலை: 'பதவியை ராஜினாமா செய்வேன்' என கூறிய எம்.பி

அயோத்தியில் 22 வயது தலித் பெண் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அவதேஷ் பிரசாத் கதறி அழுதார்.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள கால்வாய் ஒன்றில் தலித் பெண்ணின் சடலம் கடந்த இரு தினங்களுக்கு முன் மீட்கப்பட்டது. படுகொலை செய்யப்பட்ட அந்த பெண்ணுக்கு நீதி கிடைக்காவிட்டால், தனது பதவியை ராஜினாமா செய்வேன் என்று நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.

முழு விவரம் காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)