You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மியான்மரில் ரகசிய வானொலி நிலையம் ராணுவத்திடமிருந்து மக்களை எப்படி பாதுகாக்கிறது?
"இது ஃபெடரல் எஃப்எம்-இன் தலைமையகம், மேலும் எங்கள் முக்கிய ஒலிபரப்பு நிலையமும் கூட. இது எங்கள் பதுங்குக்குழி மற்றும் ஒலிப்பதிவு செய்வதற்கான ஸ்டுடியோ." என விளக்குகிறார் ஃபெடரல் எஃப்எம் நிறுவனர் கோ டின்ட்.
மியான்மர் நாட்டில் 2021 ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு, மக்கள் பலர் ராணுவ சர்வாதிகாரத்திற்கு எதிராகப் போராட முன்வந்துள்ளனர். கோ டின்ட்டின் ஆயுதம் இந்த ஒலிபரப்பு ஊடகம்.
"வான்வழித் தாக்குதல்கள் பற்றி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியவற்றை நாங்கள் விவாதிப்போம். நாங்கள் இங்கே எடிட் செய்கிறோம், ஆடியோ பதிவு செய்கிறோம், பிறகு ஒலிபரப்புகிறோம்" என்கிறார் கோ டின்ட்.
தொலைபேசி இணைப்புகள், இணையம் இல்லாத இந்தப் பகுதியில் வானொலி இன்றியமையாதது. ஃபெடரல் எஃப்.எம் வழங்கும் ஒரு முக்கிய சேவை, வான்வழித் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள்.
கோ டின்ட், ராணுவத்திற்குள் உளவாளிகள் வைத்திருக்கும் ஒரு குழுவுடன் இணைந்து, வான்வழித் தாக்குதல் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் ஒரு திட்டத்தை வகுத்தார்.
இந்த உளவாளிகளை 'வாட்டர்மிலன்ஸ்' (Watermelons) என அழைக்கிறார்கள்.
மியான்மரின் உள்நாட்டுப் போர் இப்போது ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. கோ டின்ட் தொடர்ந்து போராடுவதில் உறுதியாக இருக்கிறார், வானொலி எனும் தனது வலிமையான ஆயுதம் மூலம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.