ஆப்பிள் ஐஃபோன் 15: எகிறும் விலை - புதிய வசதிகள் என்ன?

ஆப்பிள் ஐஃபோன் 15: எகிறும் விலை - புதிய வசதிகள் என்ன?

புதிய ஐபோனில் என்ன சிறப்பு?

ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் ஆகியவற்றில் பிரகாசமான திரைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் உயர்நிலை ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை இப்போது டைட்டானியம் சட்டத்துடன் வருகின்றன. ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகியவை ம்யூட் பொத்தானுக்கு பதிலாக "செயல் பொத்தான்" ஒன்றைக் கொண்டுள்ளன.

அவை பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய ஆப்பிள் வாட்ச் சைகைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். உதாரணமாக அணிந்திருக்கும் அதே கையில் இரண்டு விரல்களை ஒன்றாகத் தட்டினால், அழைப்பிற்கு பதிலளிக்கவோ, உரையாடலை முடிக்கவோமுடிக்க முடியும்.

ஆனால் இதற்கு முந்தைய ஐஃபோன் மற்றும் வாட்ச்களை விட பெரிய அளவில் மேம்பாடு இல்லாத சாதனங்களுக்கு அதிக விலையைக் கொடுக்க நுகர்வோர் தயாராக இருப்பார்களா என்று கேள்வியை நிபுணர்கள் எழுப்புகிறார்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: