You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அசத்தலான நடனத்தின் மூலம் உலகின் கவனத்தை ஈர்க்கும் சிறுமி - காணொளி
இந்தச் சிறுமியின் பெயர் மியூ அனந்தமயா பிரனோதோ.
ஒன்பது வயதாகும் இந்தப் பெண், வெள்ளை ஷூ மற்றும் தளர்வான டி-ஷர்ட் அணிந்து நடனமாடினால் அரங்கத்தில் இருக்கும் அனைவரது கவனமும் அவள்மீது தான் இருக்கும்.
இந்தோனீசியாவைச் சேர்ந்த இந்தப் பெண், வாழ்வில் கடினமான விஷயங்களை எதிர்கொண்டு சோர்ந்து போன மக்களை தனது நடனத்தால் உற்சாகப்படுத்துகிறார்.
மியூவின் பெற்றோர் அவளுக்கு மிகவும் ஆதரவாக இருக்கிறார்கள், இப்போது மியூவின் கனவுதான் அவர்களுடைய கனவு.
மியூவின் நடனத்திற்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது பல நடன வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
மியூ, சாமி பிளாங்க் எனும் அசிரியரிடமிருந்து நடனம் கற்றுக்கொள்கிறார். அவளது ஆசிரியர் அவளை கடின உழைப்பாளி மற்றும் திறமையான மாணவி என்று கூறுகிறார்.
பல லட்சம் மக்கள் மியூவின் நடனத்தை விரும்புகிறார்கள். ஆனால் மியூ கொரிய இசைக்குழுவான BTS-இன் உறுப்பினரான ஜிமின் -னுக்கு பெரிய விசிறி. BTS-இன் 'Idol' பாடலுக்கு நடனமாடுவதை மியூ மிகவும் விரும்புகிறார்.
மியூ ஒரு freestyle dancer. இவர் break dance-உம் ஆடுகிறார். நடனம் மட்டுமல்ல, மியூவுக்கு ஓவியம் வரைவதிலும் ஆர்வம் அதிகம். மேலும், பியானோ கற்றுக்கொண்டு பாடுவதற்கும் பயிற்சி எடுத்து வருகிறார்.
தேர்ச்சி பெற்ற ஒரு தொழில்முறை நடனக் கலைஞராக மாற வேண்டும் என்பது மியூவின் கனவு.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்