கர்நாடக தேர்தல் களம் கண்டு தோல்வுயுற்ற தமிழ் வேட்பாளர்கள்

கர்நாடக தேர்தல் களம் கண்டு தோல்வுயுற்ற தமிழ் வேட்பாளர்கள்

கர்நாடக மாநிலத்தில் கடந்த சட்டமன்றத் தேர்தலைப் போலவே இந்த சட்டமன்றத் தேர்தலிலும் தமிழர் ஒருவர்கூட வெற்றிபெறவில்லை.

சுயேச்சைகள் உட்பட சுமார் 30 தமிழர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிட்டாலும் ஒருவரும் வெற்றிபெறவில்லை.

இந்தியாவில் தமிழ்நாட்டிற்கு வெளியில் தமிழர்கள் அதிகம் வசிப்பது கர்நாடக மாநிலத்தில்தான். 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, சுமார் 22 லட்சம் பேர் இங்கு தங்களைத் தமிழர்களாக அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.

கர்நாடக மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் இது 3.46 சதவீதம். இங்கு வசிக்கும் தமிழர்களையும் தமிழ் அமைப்புகளையும் கேட்டால், தமிழர்கள் எண்ணிக்கையை இன்னும் கூடுதலாகச் சொல்வார்கள். விரிவான தகவல் இந்த காணொளியில்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: