காணொளி: 2 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பும் பணயக்கைதிகள் - இஸ்ரேலில் இன்று நடந்தது என்ன?

காணொளிக் குறிப்பு, 2 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பும் பணயக்கைதிகள்
காணொளி: 2 ஆண்டுகளுக்குப் பின் வீடு திரும்பும் பணயக்கைதிகள் - இஸ்ரேலில் இன்று நடந்தது என்ன?

காஸாவில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக சிறைபிடிக்கப்பட்டு ஹமாஸ் வசம் இருந்த எஞ்சிய 20 பணய கைதிகளும் இஸ்ரேல் வந்தடைந்தனர்.

அக்டோபர் 7 தாக்குதலின் போது இவர்களை ஹமாஸ் பணயக் கைதிகளாக பிடித்துச் சென்றது. பணயக்கைதிகள் விடுவிப்புக்கு ஈடாக தடுப்புக்காவலில் இருந்த சுமார் 1,700 பேரையும், 250 பாலத்தீன கைதிகளையும் இஸ்ரேல் விடுவித்துள்ளது. அவர்கள் மேற்குகரையை வந்தடைந்தனர். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலத்தீனர்கள் என இரு தரப்பிலும் மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் காணப்பட்டனர்.

விடுவிக்கப்பட்ட இஸ்ரேலிய பணயக் கைதிகள் ஹெலிகாப்டர் மூலமாக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டனர். முன்னதாக, பணயக் கைதிகள் விடுவிப்பை காணொளி வாயிலாக பார்த்த நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர்.

முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு