காணொளி: கட்டடத்தில் மோதிய டெலிவரி டிரோன்
காணொளி: கட்டடத்தில் மோதிய டெலிவரி டிரோன்
அமெரிக்காவின் டெக்சாஸில் டெலிவரி டிரோன் ஒரு கட்டடத்தில் மோதிய தருணம் இது.
ப்ரொபெல்லர்கள் உடைந்த பிறகு, டிரோன் தரையில் விழுந்தது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இந்த சம்பவத்தால் ஏற்பட்ட சிரமத்திற்கு அமேசான் நிறுவன செய்தித் தொடர்பாளர் மன்னிப்பு கேட்டார். மேலும், இந்த விபத்தின் காரணத்தை நிறுவனம் தீவிரமாக விசாரித்து வருகிறது என்றார்.
சம்பவ இடத்தில் தீயணைப்பு வீரர்கள் டிரோனை பரிசோதித்தனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



