காணொளி: திண்டுக்கலில் களைகட்டிய சேவல் கண்காட்சி
காணொளி: திண்டுக்கலில் களைகட்டிய சேவல் கண்காட்சி
திண்டுக்கல் மாவட்டத்தில் கிளிமூக்கு, மற்றும் விசிறிவால் சேவல் கண்காட்சி நடைபெற்றது. அனைத்து இந்திய சேவல் வளர்ப்பு நண்பர்கள் என்ற குழு இந்த கண்காட்சியை நடத்தியது.
சேவல் இனம் அழிந்து போவதை தடுப்பதற்காக இந்த கண்காட்சியை நடத்துவதாக அவர்கள் கூறுகின்றனர்.
11வது ஆண்டாக இந்த கண்காட்சி நடப்பதாக கூறும் அந்தக் குழுவினர், தமிழ்நாடு மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமானோரும் இதில் பங்கேற்றதாக கூறுகின்றனர்.
இந்த முறை ஒரு விசிறிவால் சேவல் மூன்று லட்சத்திற்கு விலை கேட்கப்பட்டதாகவும், ஆனால் அதன் உரிமையாளர் அதை விற்க மறுத்துவிட்டதாக அவர்கள் கூறினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



