காணொளி: அமெரிக்காவில் குளிர்கால புயலால் ரத்து செய்யப்படும் விமான சேவைகள்

காணொளி: அமெரிக்காவில் குளிர்கால புயலால் ரத்து செய்யப்படும் விமான சேவைகள்

அமெரிக்காவின் வடகிழக்குப் பகுதி கடுமையான குளிர்காலப் புயலை எதிர்கொள்ளத் தயாராகி வருவதால், அமெரிக்கா முழுவதும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

விமானங்களைக் கண்காணிக்கும் 'ஃபிளைட்அவேர்' இணையதளத்தின்படி, வெள்ளிக்கிழமை இரவு நிலவரப்படி, அமெரிக்கா முழுவதும் 1,600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன மற்றும் 7,400 விமானங்கள் தாமதமாகியுள்ளன. இதனால் நியூயார்க் பகுதிக்குச் சேவை வழங்கும் ஜான் எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையம், நியூவர்க் லிபர்ட்டி மற்றும் லாகார்டியா ஆகிய விமான நிலையங்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.

பாஸ்டன், சிகாகோ மற்றும் கனடாவின் டொராண்டோவிலும் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

நியூயார்க் மற்றும் தெற்கு கனெக்டிகட்டில் 9 இன்ச் வரை பனிப்பொழிவு எதிர்பார்க்கப்படுவதாக தேசிய வானிலை சேவை எச்சரித்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு