பாகிஸ்தான்: காவல்துறை அதிகாரியாக சாதிக்கும் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி

பாகிஸ்தான்: காவல்துறை அதிகாரியாக சாதிக்கும் கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளி

கடந்த எட்டு ஆண்டுகளாக பாகிஸ்தானின் காவல்துறை அதிகாரியாகவும் பயிற்சியாளராகவும் மாலிக் ஹஸ்னைன் பணியாற்றி வருகிறார்.

சிறு வயதில் நிகழ்ந்த ஒரு விபத்து அவருடைய வாழ்க்கையை மாற்றிவிட்டது. அதன் பிறகு நிகழ்ந்த அறுவை சிகிச்சையில் அவருடைய ஒரு கையும், இரண்டு கால்களும் நீக்கப்பட்டன.

சமூகம் தன்னை அணுகும் விதம் பலமுறை தனது தைரியத்தைக் குலைக்க முயன்றதாக முகமது ஹஸ்னைன் கூறுகிறார். ஆனால், அவர் அசைக்க முடியாத உறுதியுடன் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டே இருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)