கோப்பையை வழங்கிவிட்டு அப்படியே நின்ற டிரம்ப் - குழம்பிய வீரர்கள்
கோப்பையை வழங்கிவிட்டு அப்படியே நின்ற டிரம்ப் - குழம்பிய வீரர்கள்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிளப் உலகக் கோப்பை தொடரில் வெற்றி பெற்ற செல்சீ அணிக்கு கோப்பை வழங்கினார். அப்போது வீரர்கள் முகத்தில் ஒரு குழப்பம். அதற்கு காரணம், கோப்பை வழங்கிய அமெரிக்க அதிபர் மேடையை விட்டு கீழே இறங்காமல் வீரர்களோடு அங்கேயே நின்றதுதான்.
இதுகுறித்துப் பேசிய செல்சீ வீரர் ரீஸ் ஜேம்ஸ், "அவர் கீழே இறங்குவார் என நினைத்தேன் ஆனால் அவர் அங்கே நிற்க விரும்பினார்" எனத் தெரிவித்தார்.
கிளப் உலகக் கோப்பை என்பது ஃபிஃபாவின் புதிய தொடர். உலகில் உள்ள சிறந்த கால்பந்து கிளப்கள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



