திரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு: நடிகர் சங்கத்திற்கு மன்சூர் அலிகான் எச்சரிக்கை

காணொளிக் குறிப்பு, நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசியதாக நடிகர் மன்சூர் அலி கான் தற்போது அதற்கு விளக்கம் அளித்துள்ளார்
திரிஷா குறித்த சர்ச்சைப் பேச்சு: நடிகர் சங்கத்திற்கு மன்சூர் அலிகான் எச்சரிக்கை

நடிகை திரிஷா குறித்து அநாகரிகமாக பேசியதாக நடிகர் மன்சூர் அலி கான் மீது விமர்சனம் எழுந்த நிலையில், `தான் தவறாக பேசவில்லை என்றும் யாரிடமும் மன்னிப்பு கேட்கப்போவதில்லை என்றும் மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் தவறு செய்துவிட்டது என்றும் அவர் விமர்சித்திருக்கிறார்.

அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய மன்சூர் அலிகான், லியோ படம் குறித்து பேசும்போது நடிகை திரிஷா பற்றி சில கருத்துகளை தெரிவித்தார். இதற்கு திரிஷா சமூக ஊடகம் வாயிலாக கண்டனம் தெரிவித்தார். மன்சூர் அலி கான் பேசியிருப்பது இழிவானது, அருவருப்பானது என்றும் “ஆணாதிக்க சிந்தனையிலிருந்து வந்த மோசமான ரசனை கொண்ட பேச்சு” எனவும் தெரிவித்திருந்த அவர் “அத்தகைய நபருடன் நடிக்காததே நல்லது” என குறிப்பிட்டிருந்தார்.

மன்சூர் அலி

பட மூலாதாரம், MANSOOR ALI KHAN/INSTAGRAM

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)