தென் மாவட்டங்களை புரட்டிப் போட்ட அதி கனமழை - புகைப்படத் தொகுப்பு

வெள்ளம்
படக்குறிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
தென் மாவட்டங்களில் கனமழை

பட மூலாதாரம், X/Defence PRO

படக்குறிப்பு, திருநெல்வேலியில் வெள்ளத்தில் தத்தளித்த 2 கர்ப்பிணிகள் உள்பட 17 பேரை ஹெலிகாப்டர் மூலம் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்ட காட்சி.
வீடுகள் தேசம்
படக்குறிப்பு, தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் வீடுகள் இடிந்து சேதமாகியுள்ளன.
வெள்ளத்தில் சிக்கிய மக்கள் மீட்பு
படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே வெள்ளத்தில் சிக்கிய மக்களை தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்டனர்.
வெள்ளத்தில் சிக்கிய மக்கள்
படக்குறிப்பு, நாகர்கோவில், மீனாட்சி கார்டன் பகுதியில் மழை வெள்ளத்தால் வீடுகளுக்குள் சிக்கியுள்ள மக்களை தீயணைப்பு மற்றும் மீட்புப்படையினர் மீட்டனர்.
வெள்ளத்தில் மூழ்கிய பேருந்து நிலையம்
படக்குறிப்பு, நெல்லை ரயில் நிலையம் பகுதியில் 6 அடி அளவிற்கு தண்ணீர் தேங்கியுள்ளது.
வெள்ளத்தில் சிக்கிய மக்கள்
படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் வளநாடு பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ரப்பர் படகுகள் மூலம் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர்.
நெல்லை பேருந்து நிலையம்
படக்குறிப்பு, நெல்லை பழைய பேருந்து நிலையத்தில் மழை வெள்ளத்தில் மூழ்கிய பேருந்துகள்.
மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
படக்குறிப்பு, தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியில் இடுப்பளவு மழைநீர் சூழ்ந்து இருப்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சூலூர் விமானப்படை தளத்திலிருந்து மீட்புப்பொருட்கள்
படக்குறிப்பு, கோவை, சூலூர் விமானப்படை தளத்திலிருந்து திருநெல்வேலி வெள்ள நிவாரணப் பணிகளுக்கு 1.3 டன், பால் பொருட்கள், பிரெட் உள்ளிட்டவை அனுப்பப்பட்டுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)