தெலங்கானா அரசு அதிகாரி வீட்டில் 2 கிலோ தங்கம், 5.5 கிலோ வெள்ளி பறிமுதல் - என்ன நடந்தது?
இரண்டு கிலோ தங்கம், 5.5 கிலோ வெள்ளி, ரூ.32 லட்சம் மதிப்புள்ள கைக்கடிகாரங்கள், விலையுயர்ந்த மொபைல்போன்கள். இவை அனைத்தும் தெலங்கானாவில் அரசு அதிகாரி ஒருவருக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஹைதராபாத் பெருநகர மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் இயக்குநர் சிவபாலகிருஷ்ணா. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்து வைத்திருப்பதாக தாங்கள் கண்டுபிடித்ததாக தெலங்கானா ஊழல் ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து, சிவபாலகிருஷ்ணாவின் வீடு தவிர, நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள், சக ஊழியர்களின் வீடுகள் என 17 இடங்களில் புதன்கிழமை அதிகாலை முதல் தெலங்கானா ஊழல் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



