You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜல்லிக்கட்டில் காளையை அடக்க மாடுபிடி வீரர்கள் தயாராவது எப்படி?
பொங்கல் என்றவுடன் கரும்பு, பொங்கல் பானைக்கு அடுத்தபடியாக தமிழர் மனதில் வருவது ஜல்லிக்கட்டுதான்.
களத்தில் சீறிவரும் காளைகளை லாவகமாக அடக்கும் மாடுபிடி வீரர்கள், காளையர்களிடம் சிக்காமல் தப்பி செல்லும் அடங்காத காளைகள் என காண்போருக்கு பிரமிப்பூட்டும் வகையில் ஜல்லிக்கட்டு நடப்பது வழக்கம்.
சரி, களத்தில் சீறும் காளையை அடக்க ஒரு மாடு பிடிவீரர் எப்படி தயாராவார், என்னென்ன பயிற்சிகளை மேற்கொள்வார்?
சிவகங்கை மாவட்டம் ஏனாசி கிராமத்தைச் சேர்ந்த அஜய், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு முழுவதும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்று வருகிறார். கார், இருசக்கர வாகனங்கள் என பல பரிசுகளை இவர் வென்றுள்ளார்.
இந்த ஆண்டும் சிறந்த வீரராக களத்தில் நிற்க வேண்டும் என்பதற்காக தீவிர பயிற்சிகளை மேற்கொண்டுள்ள அஜய், தனது கிராமத்தில் மற்ற இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார். "ஜல்லிகட்டில் பல வகையான காளைகள் களமிறங்கும், அந்த காளைகளை பற்றி தெரிந்து வைத்தால் மட்டும் அடக்க முடியும்' என்கிறார் அஜய்.
வாடிவாசலை விட்டு காளை வெளியே வரும் போது அதனை எப்படி பிடிக்க வேண்டும் என்பதையும் இந்த இளைஞர்கள் பயிற்சி செய்து பார்க்கின்றனர். காளைக்கு பயிற்சி அளிக்கும்போதே தாங்களும் ஓட்டப்பயிற்சி செய்வோம் என்றும், ஒரு மாதம் அசைவம் சாப்பிடாமல் விரதம் இருந்தே ஜல்லிக்கட்டில் பங்கேற்போம் என்றும் அவர் கூறுகிறார்.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)