நிலநடுக்கத்தை மெய்நிகரில் உருவாக்கும் வீடியோ கேம்
நிலநடுக்கம் ஏற்பட்டால், மக்கள் பெரும்பாலும் பயத்தில் தவறான செயல்களையே செய்கிறார்கள்.
அப்படியொரு சூழ்நிலையில் நம் உள்ளுணர்வுகள் நம்மை ஆட்டிப்படைக்கும். நாம் உறைந்து விடுவோம், அல்லது ஓட ஆரம்பிப்போம்.
ஆனால் போர்ச்சுகலில் உள்ள ஒரு பல்கலைக்கழகம் ஒரு மெய்நிகர் விளையாட்டை (virtual reality game) உருவாக்கியுள்ளது.
ஒரு நிலநடுக்கத்தை அது மெய்நிகரில் உருவாக்குகிறது.
அடிக்கடி நிலநடுக்கங்கள் நிகழும் இந்தோனீசியாவில் மாணவர்களை அப்படியொரு சூழ்நிலைக்குத் தயார்படுத்துவதற்காக இது பயன்படுத்தப்படுகிறது.
பிபிசி உலக சேவையின் ‘People Fixing the World’ அமைப்பைச் சேர்ந்த மைரா அனூபி இந்த விளையாட்டை முயற்சி செய்து பார்த்துள்ளார்.
அவரது அனுபவத்தை நம்மோடி பகிர்ந்துகொள்கிறார்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













