பவா செல்லதுரை: பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற முதல் எழுத்தாளர் - ரசிகர்கள் பார்வை என்ன?
‘பிக்பாஸ்’ ரியாலிட்டி நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த ஞாற்றுக்கிழமை தொடங்கியது. இதில் கலந்துகொண்டுள்ள 18 நபர்களில் பவா செல்லதுரை மீது அதிக கவனம் குவிந்துள்ளது.
இந்த நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டது தவறு என்று விமர்சனங்கள் எழுகின்றன. மற்றொரு புறம், பவாவைப் போன்ற எழுத்தாளர் ஒருவர் பிக்பாஸ் போன்ற மிகப்பிரபலமான வெகுஜன நிகழ்வில் பங்குபெறுவதை வரவேற்கவேண்டும் என்ற ஆதரவு குரல்களும் ஒலிக்கின்றன. 100 நாட்கள் நடக்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியில் இருந்து, இவரை சீக்கிரம் விலக்கிவிடாதீர்கள் என்ற பதிவுகளும் சமூகவலைத்தளங்களில் வலம்வருகின்றன.
நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாள் பவா செல்லதுரை கதை சொல்லி சிலரை கண்கலங்க வைத்தது, பெண்களை சமையல் வேலையில் முடக்குவது குறித்து அவர் விளக்கியது ஆகியவை பேசுபொருளாகியுள்ளன. முதல் நாளே பிக்பாஸின் இரண்டாவது வீட்டுக்கு அனுப்பப்பட்டார் என்பதால் இவரை பற்றிய விவாதங்களும் அதிகரித்து வருகின்றன.

பட மூலாதாரம், YOUTUBE/VIJAY TELEVISION
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



