You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
எவரெஸ்ட் உச்சியை 31 முறை அடைந்துள்ள இவர் கூறுவது என்ன?
ஷெர்பா இனத்தை சேர்ந்த இவர், எவரெஸ்ட் சிகரத்தை அடைய 150க்கும் மேற்பட்டோருக்கு வழிகாட்டியாக இருந்துள்ளார்.
எவரெஸ்ட் மலையேற்ற வீரர் கமி ரீட்டா ஷெர்பா கூறுகையில், "எவரெஸ்ட் சிகரத்திலிருந்து என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு வணக்கம் தெரிவிக்கிறேன். இன்றைய தினம் (மே 27) நான் 31வது முறையாக மலையேறுகிறேன். எவரெஸ்ட் சிகரத்திலிருந்து நான் பேசுகிறேன். எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை நான் 31 முறை அடைந்துள்ளேன். உலகின் மிக உயரமான மலை உச்சியை அதிக முறை அடைந்த சாதனையை நான் புரிந்துள்ளேன்.
மேற்கொண்டு மலையேற்றம் செய்ய வேண்டாம் என என் குடும்பத்தினர், உறவினர்கள் தொடர்ந்து கூறுகின்றனர். ஆனால், என்னுடன் பலர் மலையேற்றம் செய்ய வேண்டும் என கனவுடன் உள்ளனர்.
அவர்கள் நான் பணம் ஈட்ட உதவுவதால் மலையேற்றத்தை என்னால் நிறுத்த முடியாது. இப்போது ஓரிரு ஆண்டுகள் மலையேற்றத்தைத் தொடர்வேன் என நம்புகிறேன். அதன்பின், நான் வேறு வேலை செய்வேன்." என்றார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு